பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையையொட்டி அவரது உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சமூகத்தில் ஏழைகளுக்காக முத்துராமலிங்க தேவர் அயராது உழைத்தார் என பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் காலத்தால் அழியாத அவரது லட்சியங்கள், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க நம்மை வழிநடத்தும் என்றும் கூறியுள்ளார்.
















