நடிகர் சல்மான் கான், பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பலூசிஸ்தான் குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையாகின.
இதனால் அவர் பாகிஸ்தானின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு ஆணையத்தின் தடைசெய்யப்பட்ட நபர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள பாகிஸ்தான் தரப்பு, சல்மான் கானை எந்தவொரு பயங்கரவாதிகள் பட்டியலிலும் சேர்க்கவில்லை என விளக்கமளித்துள்ளது.
















