தேர்தல் வாக்குறுதியைத் திமுக அரசு நிறைவேற்றக்கோரி ஈரோட்டில் 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது சிபிஎஸ் ஊழியர்களுக்குப் பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட வாக்குறுதிகளைத் திமுக அளித்தது.
இவற்றைத் தற்போது வரை நிறைவேற்றவில்லை எனக்கூறிய அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதன் ஒரு பகுதியாக ஈரோடு வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
















