இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் காசாவில் நடத்திய வான்வழி தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தியதில், மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே மோதல் நீடித்து வந்தது. தொடர்ந்து டிரம்ப்பின் 20 அம்ச திட்டத்தை ஏற்று காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இதற்கிடையே விதிமீறலில் ஈடுபட்டு, இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரை ஹமாஸ் அமைப்புப் படுகொலை செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து போர் நிறுத்த விதிகளை மீறியதாகக் கூறி, தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டார்.
அதன்படி காசாவில் பல்வேறு இடங்களில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் இரவு நேர வான்வழி தாக்குதல் நடத்தினர்.
இதில் 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அமைதி ஒப்பந்தத்தை உருவாக்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பே, இஸ்ரேலின் வான்வழி தாக்குதலை ஆதரித்துள்ளார்.
















