ஜெயிலர் 2 திரைப்படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூலி படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.
ஜெயிலர்’ முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் ஏற்கனவே பாலய்யா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளதாகவும், அடுத்த மாதம் முதல் அவர் பணியாற்ற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
















