காசாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் தொடங்கப்படுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது.
இதனையடுத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டிரம்பும் ஹமாஸை எச்சரித்திருந்தார். இந்நிலையிலேயே மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடங்கியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
















