ஆசிய இளைஞர் கபடி போட்டியில் தங்கம் வென்ற வடுவூர் அபினேஷ்க்கு தமிழ் ஜனம் தொலைக்காட்சி சார்பாகப் பொன்னாடை அணிவித்து கொளரவிக்கப்பட்டது.
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் கபடி பிரிவில் இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தது.
இதில் ஆடவர் அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தின் இளம் கபடி வீரர் அபினேஷ், தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு வருகை புரிந்தார்.
அவருக்குத் தமிழ் ஜனம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. தொடர்ச்சியாகத் தமிழ் ஜனம் தொலைக்காட்சி ஊழியர்களும், தங்க மகன் அபினேசுக்கு தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இதனிடையே தனது அடுத்த கட்ட இலக்குகள் தொடர்பாக, தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்குத் தங்க மகன் அபினேஷ் அளித்த சிறப்பு நேர்காணல், இன்றிரவு ஏழு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகிறது.
அதில் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் வென்ற தருணத்தின் இறுதி நொடிகள் பற்றியும் அபினேஷ் விவரித்துள்ளார்.
















