ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அரசு ஊழியர்கள் இருவரை, அம்மாநில ஆளுநர் மனோஜ் சின்ஹா பணியிடை நீக்கம் செய்தார்.
ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியர்கள் இருவர், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது புலனாய்வு அமைப்புகளால் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து இந்திய அரசியலமைப்பின் 311வது பிரிவின் கீழ், அவர்கள் இருவரையும் பணி நீக்கம் செய்து ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டார்.
இந்த அரசியலமைப்பு பிரிவு, மாநிலத்தின் பாதுகாப்பிற்கு அவசியமானதாகக் கருதப்பட்டால், விசாரணை இல்லாமல் அரசு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய அரசை அனுமதிக்கிறது.
















