மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச இலக்கான 339 ரன்களை சேஸ் செய்து சாதனை படைத்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு கம்பீரமாக முன்னேறியது.
நவி மும்பையில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
கேப்டன் அலிசா ஹிலி 5 ரன்களில் வெளியேறியபோதும், லிட்ச்ஃபீல்டு, எலிஸ் பெரி இணை இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டது.. எலிஸ் பெரி 77 ரன்களில் வெளியேற, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய லிட்ச்ஃபீல்டு 17 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உதவியுடன் சதம் விளாசினார்.
49.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக லிட்ச்ஃபீல்டு 119 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய தரப்பில், ஸ்ரீசாரனி, தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
 
			















