ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பிறகு முப்படைகளின் போர் பயிற்சி தொடங்கின.
குஜராத் எல்லையில் உள்ள “சர் க்ரீக்” என்ற இடத்தில் திரிசூல் என்ற பெயரில் தொடங்கிய இந்தப் பயிற்சி நவம்பர் 10ம் தேதிவரை நடைபெறுவிருக்கிறது.
இதில் 25 ஆயிரம் ராணுவ வீரர்கள், டாங்கிகள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணை அமைப்புகள் பயன்படுத்தப்படவுள்ளன.
மேலும், ரஃபேல், சுகோய், எரிபொருள் நிரப்பும் விமானங்கள், போர்க் கப்பல்கள் ஈடுபடுத்தபடவுள்ளன.
இந்தப் பயிற்சி முப்படைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை பேணுவதில் உதவியாக இருக்கும் என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலை விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
 
			















