சூடானில் நோயாளிகள் உள்பட 460 பேரை துணை ராணுவப்படையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூடானில் அரசுக்கு எதிராகக் கடந்த 2023ம் ஆண்டு முதல் துணை ராணுவப் படையினர் உள்நாட்டுப்போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் எல்ஃபேஷர் நகரத்தைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த துணை ராணுவப் படையினர், சௌதி மகப்பேறு மருத்துவமனைக்கு அத்துமீறி நுழைந்தனர்.
அங்குச் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், பெண்கள், குழந்தைகள் என 460 பேரை கொன்று குவித்துள்ளனர்.
இந்தப் படுகொலையைச் சூடானின் மருத்துவர்கள் அமைப்பு உறுதி செய்துள்ளது. சூடானில் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
 
			 
                    















