RSS-ன் தேசிய அளவிலான மூன்று நாள் கூட்டம் மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோஸபாலே ஆகியோர் பாரத மாதாவின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி தொடங்கி வைத்தனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில், சமீபத்தில் மறைந்த பல முக்கியப் பிரமுகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, ஜார்கண்டின் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன், டெல்லியின் மூத்த தலைவர் விஜய் மல்ஹோத்ரா, முன்னாள் ஆளுநர் இல.கணேசன், பியூஷ் பாண்டே உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், பஹல்காம் சம்பவத்தில் கொல்லப்பட்ட இந்து யாத்ரீகர்கள், ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்கள், அத்துடன் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளில் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
 
			 
                    















