சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.
மகரந்தை கிராமத்தில் உள்ள மகரந்தை, முத்துவளசை கண்மாய்களுக்கு நீர் வர ஆதாரமாக விளங்கும் வரத்துக்கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் 118 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து 40 ஆண்டுகளாக மனு அளித்துவரும் கிராம மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின், மக்களுடன் முதல்வர் ஆகிய முகாம்களில் மனு அளித்தும் பயனில்லை என நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாகக் காளையார்கோவில் தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறையினர் மகரந்தை கிராமத்திற்கு சென்று ஆக்கிரமிப்புகள் குறித்து உடனடியாக ஆய்வு செய்ததுடன், சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்பை எடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர் இதனால் அக்கிராம மக்கள் நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
 
			 
                    















