இந்தூரிலிருந்து டெல்லி சென்ற ரயிலின் ஜன்னல் கண்ணாடியை பெண் பயணி ஒருவர் உடைக்க முயலும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தூரை சேர்ந்த பெண் பயணி ஒருவர், தனது குழந்தையுடன் டெல்லி செல்லும் ரயிலில் பயணித்துள்ளார். அப்போது, அவரது கைப்பை மாயமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்தும், உரிய நேரத்திற்கு வராததால், விரக்தி அடைந்த அந்தப் பெண் பயணி, தனது இருக்கைக்கு அருகிலிருந்த ஜன்னல் கண்ணாடியை உடைக்க முயன்றார்.
தனது அருகில் இருக்கும் குழந்தையின் மீது கண்ணாடி துகள்கள் படும் என்ற தன்னிலை மறந்து செயல்பட்ட பெண்ணிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
 
			 
                    















