தஞ்சாவூர் மாவட்டத்தில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் சேமிப்பு கிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல் மூட்டைகள் 5 நாட்களாக லாரிகளில் வைத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில், குறுவை அறுவடை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், கொள்முதல் நிலையங்களில் இருந்து பிடித்தம் செய்யப்படும் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கு ரயில் மற்றும் லாரிகள் மூலம் அனுப்பபப்பட்டு வருகிறது.
இந்நிலையில் லாரிகளில் உள்ள நெல் மூட்டைகளை ஏற்றி இறக்க, போதிய தொழிலாளர்கள் இல்லாததால், சென்னம்பட்டி, புனல்குளம் உள்ளிட்ட பல்வேறு சேமிப்பு கிடங்குகள் முன்பாக ஏராளமான லாரிகள் 5 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, லாரிகளில் உள்ள மூட்டைகளை ஏற்றி இறக்கவும், கூடுததொழிலாளர்களைப் பணியமர்த்தர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
			 
                    















