சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தில் பீகாரை பார், டெல்லியை பார், பெங்களூருவை பார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார் என்றும், ஆனால், தமிழகத்தை யாரும் பார்ப்பதில்லை எனவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
சிறப்பு திருத்தத்தில் பீகாரை பார், டெல்லியை பார், பெங்களூருவை பார் என முதலமைச்சர் கூறுகிறார் என்றும் தமிழகத்தை யாரும் பார்ப்பதில்லை என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் தோல்வி பயத்தில் பேசி வருகிறார் என்றும் ஓபிஎஸ்ஸும், செங்கோட்டையனும் நண்பர்கள் என்பதால் ஒரே காரில் சென்றனர் என்றும் தனித்தனி விமானங்களில் செல்ல முடியாததால் இபிஎஸ்ஸும், ஆனந்தும் ஒரே விமானத்தில் பயணித்தனர் என்று அவர் கூறினார்.
நகராட்சி பணி நியமன முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெறும்போது கருத்து கூற முடியாது என்றும் தனித்தனி அமைப்புகளான அமலாக்கத்துறையும் தேர்தல் ஆணையமும் அவரவருக்கான பணியை செய்கின்றனர் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
 
			 
                    















