சேலம் அருகே சொத்து தகராறு காரணமாகப் பெண் தாக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
தேமுதிக முன்னாள் மாவட்ட தலைவராக இருந்தவர் மனைவி கார்த்திகா. கணவர் இறந்துவிட்டதால் தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் செல்வகுமாரின் சொத்துக்களை பிரிப்பது தொடர்பாகக் கார்த்திகாவுக்கும், செல்வக்குமாரின் தந்தை ரங்கராஜ் ஆகியோருக்கிடையே முன் விரோதமும் அடிக்கடி சண்டையும் நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் கார்த்திகாவின் தாய் சங்கீதாவை வீட்டில் இருந்து வெளியே இழுத்து சென்ற ரங்கராஜ் மற்றும் செந்தில் சாலையில் தள்ளிவிட்டனர். காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
			 
                    















