கர்நாடக மாநிலம், பெங்களூருவில் மிகவும் விலையுயர்ந்த் ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவருக்கு, வீடு கட்டும் டைல்ஸ் கல்லை வைத்து அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் வசிக்கும் ஐடி ஊழியர் ஒருவர் சுமார் ஒரு லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சாம்சங் கேலக்சி ஃபோல்டு 7 ஸ்மார்ட் போனை அமேசான் ஆன்லைன் வர்த்தக தளத்தில் ஆர்டர் செய்துள்ளார்.
ஆனால் டெலிவரி செய்தபிறகு, போன் பாக்ஸை அவர் திறந்து பார்த்தபோது, அதன் உள்ளே வீட்டில் பூசப்படும் டைல்ஸ் கற்களின் துண்டுகள் இருந்துள்ளன.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். நல்வாய்ப்பாகப் போன் பாக்ஸை திறக்கும்போது அதனை வீடியோவாக அவர் எடுத்து வைத்துள்ளது, அவருக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
 
			 
                    















