கோயில் சொத்துகளைத் தனிநபர் பெயருக்கு மாற்றும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருத்தொண்டர் சபை அறங்காவலரான ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், கோயில் சொத்துகளுக்குத் தனிநபர் பட்டா பெறும் வகையிலும், பெயர் மாற்றம் செய்து பத்திரப்பதிவு செய்யும் வகையிலும் புதிய சட்டத்தை அரசு இயற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு, கோவில் சொத்துகளை தனி நபர் பெயருக்கு மாற்றும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டனர்.
 
			 
                    















