மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய வீராங்கனையின் சாதனையை மரிஜானே காப் தட்டிப் பறித்துள்ளார்.
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இதில் தென்ஆப்பிரிக்க தரப்பில் களமிறங்கிய மரிஜானே காப், 7 ஓவர்களில் 3 மெய்டனுடன், 20 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து, 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதனால் மரிஜானே காப் இதுவரை மகளிர் உலகக் கோப்பையில் கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 44-ஆக உயர்ந்தது.
இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையை இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமியிடம் இருந்து அவர் தட்டிப் பறித்துள்ளார்.
 
			 
                    















