இந்திய விமான படையின் போர் திறனை மேம்படுத்த METEOR ரக ஏவுகணைகளை வாங்கிக் குவிக்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னர், முப்படைகளின் பலத்தை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.
குறிப்பாக, போர் காலங்களில், இந்திய வான் எல்லையை காக்கவும், எதிரி நாட்டு இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கவும் விமானப்படை முக்கிய பங்காற்றுவதால், அதற்கான பாதுகாப்பு தளவாடங்களை வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகிறது.
அதன்படி, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கவனம் METEOR ரக ஏவுகணைகள் பக்கம் திரும்பியுள்ளது.
அதீத போர் திறன் கொண்ட ரபேல் விமானங்களுக்குச் சரியான தீனி போட METEOR ரக ஏவுகணைகளே சிறந்தது எனக் கருதியுள்ள பாதுகாப்பு அமைச்சகம், அதனை அதிகளவில் கொள்முதல் செய்யத் திட்டமிட்டு, ஒப்பந்தங்களை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளளது.
 
			 
                    















