சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாளையொட்டி குஜராத் மாநிலம் கெவாடியாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாகக் குஜராத் மாநிலம் கெவாடியாவில் மாபெரும் அணிவகுப்பு நடைபெற்றது.
தொடர்ந்து, எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு சொந்தமான நாய்களின் சாகச நிகழ்ச்சியில் ராம்பூர் ஹவுண்ட்ஸ், முதோல் ஹவுண்ட்ஸ் ஆகிய நாய் இனங்கள் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
பாதுகாப்பு படையினரின் கட்டளையைப் பின்பற்றி நாய்கள் செய்த சாகசங்கள் காண்போரை கவரும் விதமாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து, ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாகக் குஜராத், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார வாகன அணிவகுப்பு நடைபெற்றது.
ஒவ்வொரு மாநிலங்களின் கலாசாரத்தை முன்னிறுத்தி காட்சிப்படுத்தப்பட்ட வாகனங்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. புதுச்சேரி வாகனம் சென்றபோது தமிழில் பாடல் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
			 
                    















