ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லா நகரில் உள்ள சஞ்சவுலி மசூதியை இடிக்குமாறு விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, சிம்லா மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மசூதி அமைந்துள்ள நிலத்தின் உரிமை ஆவணங்களை வக்ஃப் வாரியத்தால் சமர்ப்பிக்க முடியவில்லை என்றும், இதனால் எஞ்சியிருக்கும் இரண்டு தளங்களையும் இடிக்குமாறும் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையிடப் போவதாகச் சஞ்சவுலி மசூதி கமிட்டியின் முகமது லத்தீஃப் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
			 
                    















