2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்குப் புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் சாம்பியனாகக் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8-வது இடத்தைப் பிடித்து வெளியேறியது.
இதனால் அடுத்த சீசனுக்கு முன் அந்த அணியில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படியே, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் அந்த பதவியில் இருந்து சமீபத்தில் விலகினார்.
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை கொல்கத்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
			 
                    















