உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு, முன்னணி வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆஸ்திரேலியா போன்ற வலிமையான எதிரணியை இந்திய அணி வீழ்த்தியிருப்பது, அவர்களின் மன உறுதி, நம்பிக்கை மற்றும் மிகுதியான ஆர்வத்தின் வெளிப்பாடு எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பெண்கள் அணிக்கும் குறிப்பாக, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெமிமாவுக்கும் விராட் கோலி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
 
			 
                    















