127 ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய அணியை அலறவிட்ட இந்திய அணி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்சை சக வீராங்கனைகள் கொண்டாடித் தள்ளினர்.
நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயம் செய்த 339 ரன்கள் இலக்கைக் கடைசி ஓவருக்கு முன்பாகவே எட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இதில் கடைசி வரை போராடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆட்டத்தை இழக்காமல் 127 ரன்கள் அடித்து, அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
இதனால் போட்டி முடிந்த பிறகு இந்திய அணியினரின் அறைக்குச் சென்ற ஜெமிமாவை, சக வீராங்கனைகளை நெகிழ்ச்சியுடன் கட்டிப்பிடித்து பாராட்டினர். இந்த வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
 
			 
                    















