ஜம்மு – காஷ்மீரில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள Gul-e-Dawood மலர் பூங்கா, சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்த்து வருகிறது.
பொதுவாகவே சுற்றுலா துறை சார்ந்து இயங்கும் ஜம்மு – காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், பொருளாதாரத்தில் சற்று சுணக்கம் கண்டது.
இதையடுத்து, பாதுகாப்பை வலுப்படுத்திச் சுற்றுலா பயணிகளின் நம்பிக்கையைப் பெற்ற பின், பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு மக்கள் குடும்பம் குடும்பமாக வருகை தரத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், புதிதாகத் திறக்கப்பட்டுள்ள Gul-e-Dawood பூங்கா, சுற்றுலா பயணிகளின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
பூங்காவில் ரக ரகமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வண்ண மலர்கள், மனதை வருடுவதாகச் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
மலர் செடிகள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக இயற்கை ஆர்வலர்கள் பரவச நிலைக்கே செல்கின்றனர்.
 
			 
                    















