டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பஞ்சாப் அரசு 7 நட்சத்திர சொகுசு மாளிகை ஒதுக்கியுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி பாஜக வெளியிட்டுள்ள பதிவில், சாமானிய மனிதரைப் போல் நடித்த அரவிந்த் கெஜ்ரிவால், இன்னொரு பிரமாண்டமான ஷீஷ் மஹாலைக் கட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பஞ்சாப் போதைப்பொருள், வேலையின்மை மற்றும் ஊழலில் சிக்கித் தவிக்கும் போது, மாநில அரசு கெஜ்ரிவாலின் தனிப்பட்ட சேவை குழுவாக செயல்பட்டு வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிப்பதாகவும் பாஜக குற்றம்சாட்டி, அதற்கான வான்வெளி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
டெல்லியின் முதல்வராக இருந்தபோது அரவிந்த் கெஜ்ரிவால்வாழ்ந்து வந்த வீட்டைப் பல கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தியதாகவும், அதிக விலையுயர்ந்த ஆடம்பர பொருள்கள் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
















