வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், மதுரை மாவட்டத்தில் உள்ள ஆசியாவின் 2வது மிக நீளமான தொட்டிப்பாலத்திற்கு சென்றடைந்தது.
வைகை அணை வேகமாக நிரம்பி வருவதால், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், உசிலம்பட்டியில் உள்ள 2வது மிக நீளமான நீர் செல்லும் தொட்டிப்பாலத்திற்கு சென்றடைந்தது. இந்த நீர், விவசாயம் மற்றும் குடிநீருக்கு பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
















