சமூக சீர்திருத்தவாதி சுவாமி தயானந்த சரஸ்வதியால் உருவாக்கப்பட்ட ஆர்ய சமாஜம் அமைப்பு இந்தியாவின் வேத பாரம்பரியத்தை பாதுகாத்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆர்ய சமாஜம் அமைப்பு உருவாக்கப்பட்டதன் 150-வது ஆண்டு தினம் மற்றும் தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்த நாளையொட்டி, டெல்லியில் சர்வதேச ஆர்ய சம்மேளனம் என்ற தலைப்பில் 4 நாள் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, ஆர்ய சமாஜம் அமைப்பானது இந்தியாவின் வேத பாரம்பரியத்தை காப்பாற்றுவதில் முக்கியப் பங்காற்றுவதாக தெரிவித்தார்.
சமூக சீர்த்திருத்தங்களை முன்னெடுத்ததுடன், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட பல்வேறு தியாகிகளுக்கும் ஆர்ய சமாஜம் அமைப்பு ஊக்கமளித்ததாக கூறிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கு எதிரான சித்தாந்தங்களை ஆர்ய சமாஜம் எதிர்த்து வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
















