சென்னை அம்பத்தூர் அருகே பாதையை மறித்து கட்டப்பட்ட மயான சுற்றுச்சுவரை இடிக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரகடம் மயானத்தை 200 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், அம்பத்தூர் மண்டல ஊழியர்கள் பானு நகர் வழியாக மயானத்திற்கு செல்லும் வழியை முழுவதும் அடைத்து சுற்றுச்சுவர் எழுப்பினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த காவல் அதிகாரிகள் இருதரப்பினரிடம் பேசி சமாதானம் செய்து வைத்தனர். மேலும், சுற்றுச்சுவரை இடித்து பானு நகர் வழியாக மயானத்திற்கு செல்லும் வகையில் வழியை ஏற்படுத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.
















