சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஷனுக்கும், அவரது காதலிக்கும் திருமணம் நடைபெற்றது.
சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம், சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெறும் ஏழு கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தப் படம், 90 கோடி ரூபாய் வரை வசூலித்துச் சாதித்தது.
இந்நிலையில், இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியின் போது காதலி அகிலாவிடம் தனது காதலை வெளிப்படுத்திய அபிஷன், அவரைத் தற்போது மனைவியாக்கிக் கொண்டார்.
















