தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித்குமார், தனது தொழில்முறை வாழ்க்கை, தனிப்பட்ட ஆர்வம் மற்றும் புகழின் இருண்ட பக்கம் ஆகியவை குறித்து ஆழமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில் புகழ் என்பது, உண்மையிலேயே முக்கியமான விஷயங்கள் அனைத்தையும் நம்மிடமிருந்து எடுத்துக்கொள்கிறது என நடிகர் அஜித்குமார் வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும், தான் திரையுலகிற்கு வந்தபோது, தன்னால் சரியாகத் தமிழ் பேச முடியவில்லை எனக்கூறிய அவர், அதற்காகக் கடும் பயிற்சிகளை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்குமாரின் மனம் திறந்த மற்றும் வெளிப்படையான இந்தப் பேச்சு, ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
















