சென்னை கோயம்பேட்டில் தேவர் குருபூஜைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் சாலையில் ரகளையில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி விழா குருபூஜை விமர்சையாக நடைபெற்றது.
இதில் கலந்துகொள்வதற்காக ஏராளமான இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சென்றனர்.
இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து சாலை நெடுகிலும் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கியவண்ணம் அவர்கள் பயணித்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
			 
                    















