கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் புகையான் நோய் தாக்குதலால் சேதமடைந்து வருவது விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கம்பம்பள்ளி, பூசாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது.
இதனைக் கட்டுப்படுத்த பலமுறை பூச்சி மருந்துகளைத் தெளித்தும் பயனில்லாத நிலையில், நோய் தாக்குதலால் பயிர்கள் சேதமடைந்து வருவது விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
















