ஆட்சிமுறை, இராணுவம், கட்டிடக்கலை, சமயம் மற்றும் இலக்கியம் என்று அனைத்திலும் சிறந்து விளங்கிய மாமன்னர் இராஜராஜ சோழன் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“சோழ மரபின் பொற்காலம்” என்று போற்றப்படும் வகையிலான ஆட்சி வழங்கிய, மாமன்னர் இராஜராஜ சோழரின் 1040-வது ஆண்டு சதயவிழா இன்று.
தமிழர் கட்டிடக் கலைக்கொரு சான்றாக, உலகமே வியந்து பார்க்கும் விதமான தஞ்சைப் பெருவுடையார் கோவிலை நமக்காக கொடுத்துச் சென்ற மாமன்னர் இராஜராஜன், கடல் கடந்து போர் புரிந்து தனது நிர்வாகத்தை விரிவுபடுத்தியதன் மூலம், தமிழர் வீரத்தை உலகிற்கு பறைசாற்றியவர்.
ஆட்சிமுறை, இராணுவம், கட்டிடக்கலை, சமயம் மற்றும் இலக்கியம் என்று அனைத்திலும் சிறந்து விளங்கிய மாமன்னர் இராஜராஜ சோழரின் சதய நாளில், அவர்தம் வரலாற்றுப் பெருமைகளை போற்றுவோம் என்று எல். முருகன் தெரிவித்துள்ளார்.
















