நெல்லை கவின் ஆணவப் படுகொலை வழக்கில் சுர்ஜித்தின் ஐபோனை அன்லாக் செய்ய முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின், கடந்த ஜூலை 27ஆம் தேதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் காதலியின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
காவல்துறையில் பணியாற்றிய தம்பதிகளான சுர்ஜித் பெற்றோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், தந்தை சரவணனையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், சிறையில் உள்ள சுர்ஜித்தின் ஐபோனை அன்லாக் செய்ய முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர்.
குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் தவறான கடவுச்சொல்லை உள்ளிட்டு அன்லாக் செய்ய முயற்சித்தால், செல்போனில் உள்ள தரவுகளும் தானாகவே அழியும் வகையில் ஐபோன் செட்டிங்ஸ் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தரவுகளை மீட்பதன் மூலம் வழக்கில் மேலும் பல முக்கியமான ஆதாரங்கள் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
			 
                    















