ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரே நாட்டை ஒருங்கிணைப்பதாக ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் சத்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆப்ரேஷன் சிந்தூர் மிகவும் வெற்றிகரமான நடவடிக்கையாக இருந்ததாகவும், 3 பாதுகாப்புப் படைகள் மட்டுமல்ல, முழு நாடும் ஒன்றிணைந்ததை அனைவரும் பார்த்ததாகவும் கூறினார்.
புதிய தொழில்நுட்பம்மூலம் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றதாகக் கூறிய உபேந்திர திவேதி, எந்தப் பாகிஸ்தான் குடிமகனும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டதாகவும், பயங்கரவாதிகளையும் அவர்களின் எஜமானர்களையும் மட்டுமே குறிவைத்ததாகவும் கூறினார்.
















