வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு அரிய வகை பறவைகள் மற்றும் தங்கம் கடத்தி வந்த 4 பேரை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.
மலேசியாவில் இருந்து சென்னைக்கு வனவிலங்குகள் கடத்தப்படுவதாகச் சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அரிய வகை பறவைகளை 3 பேர் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
இதேபோல, பாங்காக்கில் இருந்து சுமார் 733 கிராம் தங்கத்தை கடத்தி வந்த நபரை கைது செய்த அதிகாரிகள், 86 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
















