சபரிமலையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் பல மொழி அடங்கிய தகவல் தொடர்புச் செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக வருகிற 17-ந் தேதி நடை திறக்கப்பட்டு டிசம்பர் 27-ந் தேதி வரை பூஜை நடைபெற உள்ளது.
தொடர்ந்து மகரவிளக்கு பூஜை காலங்களில் பல மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய பலமொழி தகவல் தொடர்புச் செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதில் தரிசனம், தங்கும் வசதி, அவசர தேவை, மருத்துவ வசதி, காலநிலை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ள தேவசம்போர்டு ஏற்பாடு செய்துள்ளது.
















