பப்புவா நியூ கினியாவின் மலைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேர் உயிரிழந்தனர்.
பப்புவா நியூ கினியாவின் மலைப் பகுதியான எங்கா மாகாணத்தில் உள்ள குகாஸ் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் வீடுகள் தரைமட்டமானதால், துாங்கிக் கொண்டிருந்தவர்கள் அப்படியே புதையுண்டனர்.
உள்ளூர்வாசிகள் 30 பேர்வரை இறந்ததாகவும், 18 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டதாகவும் எங்கா மாகாண ஆளுநர் பீட்டர் இபடாஸ் தெரிவித்துள்ளார். 21 பேர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
			 
                    















