கோவாவில் தொடங்கிய FIDE செஸ் உலகக் கோப்பைக்குச் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் பெயர் சூட்டப்பட்டது.
FIDE செஸ் உலகக் கோப்பை தொடரானது கோவாவில் உள்ள டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.
விழாவில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், FIDE தலைவர் அர்கடி துவார்கோவிச் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, FIDE உலகக் கோப்பைக்கு இந்தியாவின் முதல் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பெயர் சூட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து விழாவில் பேசிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இதற்கு முன்பு இந்தியாவில் உலகக் கோப்பை நடந்தபோது 10 கிராண்ட் மாஸ்டர்கள் மட்டுமே இருந்ததாகவும், அதன் எண்ணிக்கை தற்போது 90-ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். மகளிர் உலகக் கோப்பையைத் திவ்யா தேஷ்முக் வென்றது, சதுரங்க விளையாட்டின் பெரும் சாதனை எனவும் கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய FIDE தலைவர் அர்கடி துவார்கோவிச், சதுரங்கத்தின் பழமையான தாயகம் மட்டுமல்லாமல் உலகின் மிக வலுவான சதுரங்க நாடாகவும் இந்தியா திகழ்வதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
















