இந்திய விண்வெளி ஆய்வு மையம் சார்பில், சி.எம்.எஸ் – 3 செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்படுகிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்த செயற்கைகோள் ஏவப்படவுள்ளது.
இந்த செயற்கைகோள், இஸ்ரோவின் மிகவும் சக்திவாய்ந்த எல்.எம்.வி-3 மூலம் ஏவப்படுகிறது. CMS-03 என்பது ஒரு மல்டி-பேண்ட் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும்.
இது சுமார் நான்காயிரத்து 400 கிலோகிராம் எடை கொண்டது. இது புவியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பப்படும் மிக அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்தியக் கடற்படை மற்றும் ராணுவத்தின் தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்த இந்தச் செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.
மேலும், இந்திய நிலப்பரப்பு மற்றும் பரந்த கடல் பகுதி முழுவதும் டிஜிட்டல் இணைப்பை வலுப்படுத்தவும் இது உதவும் என்றும் கூறப்படுகிறது. இன்று மாலை 5.26 மணிக்கு செயற்கைக்கோள் விண்ணில் பாயவுள்ளது.
















