விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சிந்தகம்பூண்டி கிராமத்தை சேர்ந்த நதீஷ், அஸ்விந்த், விஷால் ஆகிய 3 பேர், மேல்மலையனூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
அக்னி குளம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விஷால் லேசான காயத்துடன் உயிர் தப்பிய நிலையில், நதீஷ், அஸ்விந்த் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
















