கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக காமராஜபுரம் பகுதியில் வசிக்கும் தவெக நிர்வாகி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அந்தவகையில், வேலுச்சாமிபுரத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த பொதுமக்கள், வணிகர்கள் என சுமார் 20க்கும் மேற்பட்டோரிடம் சுற்றுலா மாளிகையில் வைத்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, காமராஜபுரம் பகுதியில் உள்ள தவெக நிர்வாகி ராம்குமார் என்பவரது வீட்டில் அவரது தாய், தந்தையிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஆதவ் அர்ஜுனா நடத்தி வரும் “வாய்ஸ் ஆப் காமன்ஸ்” என்ற அமைப்பில் ராம்குமார் பணியாற்றி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
















