மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் முன்னேற்றம் அடைந்து வருவதாக, இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
“எல்.வி.எம்.3 – எம் 5” ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “எல்விஎம்” திட்டத்தில், இஸ்ரோவுக்கு 8வது வெற்றி கிடைத்துள்ளதாகவும் இதற்காக பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் எனவும் குறிப்பிட்டார்.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும், ‘ககன்யான்’ திட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறிய அவர், அதற்கு முன்பாக 3 ஆளில்லா விண்கலங்களை விண்ணுக்கும் அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
அதில் முதல் திட்டத்தை, அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு முன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்கான உபகரணங்கள், ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வந்துள்ளன எனவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் குறிப்பிட்டார்.
















