ஆப்கானிஸ்தானில் அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் “மசிர் ஐ ஷெரிப்” நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளி 3 ஆக பதிவாகியதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கின.
இதனால் அதிகாலையில் உறங்கி கொண்டிருந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
















