மயிலாடுதுறையில் சாலையில் சென்ற மூதாட்டியிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற காட்சி வெளியாகி உள்ளது.
ஆரோக்கியநாதபுரத்தை சேந்த 75 வயது மூதாட்டி, அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று வீடு திரும்பி உள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த இருவர், மூதாட்டியிடமிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
கீழே விழுந்து காயமடைந்த மூதாட்டி சுசீலா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
















