கோவையில் கல்லூரி மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை விமான நிலையத்தின் பின்புறம், நேற்றிரவு கல்லூரி மாணவி ஒருவர், காரில் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், அந்த இளைஞரை கடுமையாக தாக்கி, மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக காயமடைந்த இளைஞர், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அப்பகுதியில் காயத்துடன் இருந்த மாணவியை மீட்ட போலீசார், சிகிச்சைக்காக அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்த ஆண் நண்பர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதனிடையே தப்பியோடிய 3 பேரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
















