அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த அணுசக்தி மையங்களை அதிக வலிமையுடன் மறுகட்டமைக்கவுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக ஏற்கெனவே இரு நாடுகளிடையே ஐந்து சுற்றுப் பேச்சுவாா்த்தை நடைபெற்ற நிலையில், 6-ஆம் சுற்றுப் பேச்சுவாா்த்தை நடைபெறுவதற்கு முன்பாக ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்தச் சூழலில் ஈரான் அதிபா் மசூத் பெஸெஷ்கியான், கட்டடங்களை அழிப்பதால் நாங்கள் பின்வாங்கமாட்டோம் என்பதை உணா்த்துவோம் எனக் கூறியுள்ளார்.
















